Friday, 21 September 2018

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை 8 நாட்கள் அறிவிப்பு

நாளை முதல் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவுபெறுவதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 10 -ஆம் தேதி (செப்.10) தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

 மொஹரம் பண்டிகை என்பதால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை நாளாகும். இதன் காரணமாக சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன.

 இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (செப். 23) முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 3 -ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

மார்கழி மாத விரதங்கள்

மார்கழி மாத முக்கிய விரதங்கள் அறிவோம். மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மா...